

இலங்கைக்கு அருகே தென் மேற்கு வங்கக் கடலில், சில தினங்களுக்கு முன்பாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர மாநிலம், நெல்லூ ருக்கு தென்கிழக்கில் நிலை கொண்டது.
இந்நிலையில் நேற்று புயல் சின்னமாக மாறி, மசூலிப் பட்டினத்துக்கு 125 கி.மீ. தென்கிழக்கிலும், விசாகப் பட்டினத்துக்கு 350 கி.மீ. தென்மேற்கிலும், காக்கி நாடாவுக்கு 225 கி.மீ தென் மேற்கிலும் மையம் கொண் டது.
அது மேலும் நகர்ந்து ஒடிசாவை நெருங்குகிறது. இந்த புயலுக்கு ரோனு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முன்னெச்செரிக்கை நட வடிக்கையாக, பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.