Published : 23 May 2022 06:20 AM
Last Updated : 23 May 2022 06:20 AM

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழாவின்போது தெப்பம் மோதியதால் இடிந்து விழுந்த மண்டப தூண்கள்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழாவின்போது, கமலாலயக் குளத்தில் வலம் வந்த தெப்பம், கரையில் உள்ள மண்டபத்தின் அலங்காரத் தூண்கள் மீது மோதியதால்,2 தூண்கள் இடிந்து விழுந்தன.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது.இதில், 50 அடி அகலமும் 50 அடி நீளமும் கொண்ட 500 பக்தர்கள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட தெப்பத்தில் பார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-ம் நாள் தெப்பத் திருவிழாவில், கமலாலயக் குளத்தில் தெப்பம் முதல் சுற்று முடிந்து, 2-வது சுற்று வலம் வந்துகொண்டிருந்தபோது, குளத்தின் மேல்கரையில் உள்ள மண்டபத்தின் 4 அலங்காரத் தூண்களில் தெப்பம் மோதியது. இதில், 2 அலங்காரத் தூண்கள் இடிந்து குளத்துக்குள் விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக, அந்த இடத்தைவிட்டு தெப்பம் நகர்ந்த பின்பு தூண்கள் இடிந்து விழுந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின்போது, தெப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் கவிதா தகவல் தெரிவித்ததையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x