

திருக்குறளை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது பாஜக அரசுதான் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை ஆதரித்து ஸ்மிருதி இரானி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:
திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது முறையற்ற கூட்டணி. அந்தக் கூட்டணி 2 ஜி ஊழலைத் தான் மக்களுக்கு நினைவுபடுத்து கிறது. அவர்கள் 2ஜி-யில் மட்டும் ஊழல் செய்யவில்லை. நாட்டுக் காக ஹெலிகாப்டர் வாங்குவ திலும் ஊழல் செய்துள்ளனர்.
மற்றொரு கட்சியான அதிமுகவோ, தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்து வாக்கு கேட்கிறது. இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களை பொருளாதார ரீதி யாக வலுப்படுத்தி, தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்பவர்களாக அவர் களை ஏன் மாற்றவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அந்தக் கட்சியின் தலைவர் ஒருவர் கூறும்போது, ‘மக்களுக்காக ஒரு ரூபாய்க்கு திட்டம் வகுத் தால் அதில் 10 பைசாதான் மக்களை சென்றடைகிறது’ என குறிப்பிட்டார். ஆனால், பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனால், இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு மானியங்கள் சென்று சேருகிறது.
இதேபோல முத்ரா வங்கித் திட்டம், சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் என மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. திருக்குறளை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது பாஜக அரசுதான். தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட்ட பாஜவை ஆதரியுங்கள்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.