Published : 10 May 2016 08:14 AM
Last Updated : 10 May 2016 08:14 AM

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று (மே 10) பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலே (மே 4) தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந் நிலையில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

கரூர் மாவட்டம் பஞ்சட்டி, திரு நெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் தலா 50 மில்லி மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறை யில் 40 மில்லி மீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், சிவ கங்கை மாவட்டம் இளையான் குடி, தேவகோட்டை, திருவண்ணா மலை மாவட்டம் செங்கம், கோயம் புத்தூர், திருச்சி மேலணையில் தலா 30 மில்லி மீட்டர், திருப்பூர் மாவட்டம் அவினாசி, கரூர் மாவட் டம் குழித்தலை, தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, கரூர் மாவட்டம் தோகமலை, வேலூர் மாவட்டம் ஆலங்காயம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கோவை பீளமேடு விமான நிலையம், சூலூரில் தலா 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

தேனி மாவட்டம் கூடலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, தாத்தையங்கார் பேட்டை, ஊட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, சேலம் மாவட்டம் ஓமலூர், தேனி மாவட் டம் உத்தமபாளையம், தருமபுரி, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, கோவை மாவட்டம் அன்னூர், பொள்ளாச்சி, தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல், சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்று (மே 10) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.பாலச்சந்திரன் கூறும் போது, “தமிழகத்தின் உள் மாவட் டங்களில் பெரும்பாலான இடங் களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் இடிமேகங்கள் உருவாகி மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சிய ஸாகவும் இருக்கும்” என்றார்.

தமிழகத்தில் நேற்று அதிக பட்சமாக திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் (105.8 டிகிரி ஃபாரன் ஹீட்) வெப்பம் பதிவாகியிருந் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x