Published : 22 May 2022 04:15 AM
Last Updated : 22 May 2022 04:15 AM

சிறுவர்கள் பைக் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், வாகனம் பறிமுதல்: மதுரை போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

மதுரை

சிறுவர், சிறுமிகள் விதியை மீறி பைக் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை போக்கு வரத்து போலீஸார் எச்சரித் துள்ளனர்.

மதுரை நகரில் போக்குவரத்து விதியை மீறல், ஓட்டுநர் உரிமம் இன்றி 18 வயதுக்குட்பட்ட மாண வர்கள், சிறுவர்கள், சிறுமிகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இவர்களால் விபத்து நேரிட் டால், பாதிக்கப்பட்டோர் இன் சூரன்ஸ் போன்ற இழப்பீடு பெறுவதிலும் சிக்கல் உள்ளது. இவற்றைத் தடுக்கும் நோக்கில் போக்குவரத்து விதிகளை மீறும் சிறுவர்கள், அவர்களது பெற்றோர் மீது அபராதம், பைக் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் போக்கு வரத்து மற்றும் வாகனத் தணிக்கை போலீஸாருக்கு காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி, நகரில் உள்ள 10 போக்குவரத்து காவல்நிலைய போலீஸார் நேற்று தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதன்மூலம் 63 சிறுவர்கள், 3 சிறுமிகள் பிடிபட்டனர். ஓட்டுநர் உரிமம் இன்றி பைக் ஓட்டியதற்கு ரூ.500, உரிமம் இல்லை எனத் தெரிந்தும், வாகனத்தை கொடுத்த பெற்றோர், பாதுகாவலர் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.500 மற்றும் ஹெல்மெட் அணி யாதவர்களுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் விதியை மீறிச் சென்று போலீஸில் சிக்கிய 66 சிறுவர், சிறுமிகளுக்கு அறிவுரை வழங்குதல், இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக் காரணமாக இருக்க மாட்டோம் எனப் பெற்றோர், வாகன உரிமையாளர்களிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு, பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்கும் நிகழ்ச்சி தெப்பக்குளம் பகுதியில் நேற்று நடந்தது.

போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகச்சாமி அறிவு ரைகளை கூறினார். போக்குவரத்து உதவி ஆணையர்கள் திரு மலைக்குமார், மாரியப்பன், மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.கள் பங்கேற்றனர்.

தெப்பக்குளம் பகுதி போக்கு வரத்து ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

போக்குவரத்து ஆணையர் ஆறுமுகசாமி பேசும்போது, போக்குவரத்து விதிமீறல் திருத்த சட்டத்தின்படி, மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் அமல்படுத்தப்பட்டு, நீதிமன்றம் மூலம் செலுத்துகின் றனர். மதுரையில் 18 வயதுக் குட்பட்ட சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதியை மீறுவது தொடர்ந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம், 3 மாதம் சிறை தண்டனை, வாகனம் பறி முதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x