

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பகிர்ந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20,365 மாணவர்க ளும் 23,742 மாணவிகளும் என மொத்தம் 44,107 பேர் தேர்வெழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்ட அளவில் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ரோஸ்லீ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 1,191 மதிப்பெண்கள் பெற்றார். (தமிழ் 197, ஆங்கிலம் 195, வணிகவியல் 200, கணக்கியல் 200, பொருளாதாரம் 200, வணிக கணிதம் 199).
அதேபோல் ஆதம்பாக்கம் எஸ்டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிநாராயணன் 1,191 மதிப்பெண்கள் பெற்றார். (தமிழ் 198, ஆங்கிலம் 196, கணக்கு 200, இயற்பியல்198, வேதியியல் 199, கணினி அறிவியல் 200). ஒரே மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் இருவரும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.
பம்மல் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி 1,187 மதிப்பெண்கள் பெற்றார். (தமிழ் 195, ஆங்கிலம் 193, வணிக கணிதம் 200, வணிகவியல் 200, கணக்கியல் 200, பொருளா தாரம் 199).
அதேபோல் பாலவாக்கம் மேனுல்மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீதர்ஷனும் 1,187 மதிப்பெண் பெற்றார்.
(தமிழ் 193, ஆங்கிலம் 196, வேதியியல் 200, கணிதம் 200, இயற்பியல் 198, கணினி அறிவியல் 200 ) இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றதால் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தனர்.
மேலும், மறைமலைநகர் செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிஸ்ரீ 1,186 மதிப்பெண்களும் (தமிழ் 195, ஆங்கிலம் 192, வணிக கணிதம் 200, கணக்கு பதிவியல் 200, வணிகவியல் 200, பொருளாதாரம் 199) காஞ்சிபுரம் அரசு நகர் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவினும் 1,186 மதிப்பெண் பெற்றனர்.
(தமிழ் 196, ஆங்கிலம் 192, வணிக கணிதம் 200, வணிகவியல் 199, கணக்கு பதிவியல் 199, பொருளாதாரம் 200 ) இவர்கள் இருவரும் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தனர்.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா. கஜலட்சுமி பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.