“திமுக அரசு இம்முறையாவது பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா?” - அண்ணாமலை கேள்வி

“திமுக அரசு இம்முறையாவது பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா?” - அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: "மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், திமுக அரசு இந்த முறையாவது விலை குறைக்குமா?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக அரசு இந்த முறையாவது விலை குறைக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in