Published : 08 May 2016 10:47 AM
Last Updated : 08 May 2016 10:47 AM

‘தி இந்து’, தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சி பொதிகை டிவியில் இன்று மாலை ஒளிபரப்பு

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணை யம் இணைந்து ஈரோட்டில் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சி தொகுப்பு, பொதிகை தொலைக் காட்சியில் இன்று (ஞாயிறு) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடக்க உள்ளது. இதில், முதல்முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தது. இந்த விழாக்கள் குடியாத்தம், மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை, நாகப்பட்டினம், ஈரோடு, சிதம்பரம் ஆகிய ஊர்களில் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் முதல் தலைமுறை வாக்காளர் விழிப்புணர்வுக்காக ‘தி இந்து’ உருவாக்கிய, பாடலாசிரியர் அண்ணாமலை எழுதி, இசை யமைப்பாளர் தாஜ்நூர் இசை யமைத்த பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் உயர் அலுவலர்கள் பங்கேற்று, விழாவை தொடங்கிவைத்தனர். ஒவ்வொரு ஊரிலும் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ‘தேர்தலில் வாக்குகளை யாருக் கும் விற்காமல், சுயமாக சிந்தித்து வாக்களிப்போம்’ என்று உறுதி யேற்றனர்.

நிகழ்ச்சி அரங்கில் மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப் பட்டன. இந்திய ஜனநாயகத்தின் சிறப்புகள் குறித்து ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் விளக்கவுரையாற்றினார். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பேராசிரி யர்கள், பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினர். தேர்தல் தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு நாடகங்களும் நடை பெற்றன. இந்த நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனின் பொதிகை தொலைக் காட்சி பதிவு செய்துள்ளது.

நாகப்பட்டினத்தில் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகளை என்.எஸ்.அருண் மொழி தயாரித்து வழங்கினார். அது ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 24-ம் தேதி (ஞாயிறு) மாலை 6 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியை பி.சம்பத் தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச்சித் தொகுப்பு கடந்த ஞாயிறு (மே 1) ஒளிபரப்பப்பட்டது.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச் சியை என்.எஸ்.அருண்மொழி தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச் சித் தொகுப்பு, பொதிகை தொலைக்காட்சியில் இன்று (மே 8) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. தேர்தல் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் இந்த நல்ல நோக்கத்துக்காக தூர்தர்ஷனும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x