

சென்னை: பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்" மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாக விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.