

சாத்தூர் அருகே பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரேகால்புதூரைச் சேர்ந்த ராம பத்திரன்(45), இவரது மனைவி ஜெயஸ்ரீ(45), குளச்சலைச் சேர்ந்த ரகுராமன்நம்பி மனைவி சிந்து குமாரி(43), மகன் அரவிந்த்(14), சதீஷ்(40), சந்தோஷ் மனைவி ஸ்ரீஜா(40), சுகாசினி(72) ஆகி யோர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக நேற்று முன்தினம் இரவு குளச்சலில் இருந்து கோவைக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்த பிஜு(33) என்பவர் காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நான்குவழிச் சாலையில் நல்லி ஜங்ஷன் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத் தின் தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் சிந்துகுமாரி, ஜெயஸ்ரீ, சதீஷ், கார் ஓட்டுநர் பிஜு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராமபத்திரன், ஸ்ரீஜா, அரவிந்த், மூதாட்டி சுகாசினி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
சாத்தூர், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 4 பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.