அரசு கலைக் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகர் தெரிவித் தார்.

பிளஸ்-2 தேர்வு முடிவடைந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவு வெளியிடப்பட இருக்கிறது. ஏற் கெனவே பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகி றது. சென்னையில் பல தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த வாரத்தில் இருந்தே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண் ணப்பங்கள் எப்போது வழங்கப் படும்? என்று பிளஸ்-2 தேர் வெழுதிய மாணவ-மாணவி களில் ஒருபிரிவினர் மிகுந்த ஆவ லுடன் எதிர்பார்த்து கொண்டிருக் கிறார்கள்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகரிடம் கேட்டபோது, “தமிழ கத்தில் 83 அரசு கலை அறிவி யல் கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் களை மே 2-ம் தேதி முதல் வழங்க அனைத்து கல்லூரி முதல்வர்களும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர். அதன்படி திங்கள் கிழமை (இன்று) முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப் பம் வழங்கும் பணி தொடங்கும். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்து 10 நாட்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in