'அயோத்திதாசர் மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்' - முதல்வர் ஸ்டாலின்

'அயோத்திதாசர் மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்' - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: அயோத்திதாசர் மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும் வகையில் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயோத்திதாசர் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம். அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in