மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பெற்றோர் எதிர்ப்பு
சாதனை மாணவி ஆர்த்தியின் பெற்றோர் கூறும்போது, ‘‘பிளஸ் 2 வரை மாநில கல்விமுறையில் படித்துவிட்டு தற்போது மருத்துவ நுழைவுத் தேர்வு மத்திய பாடத்திட்டத்தில் எழுதுவது கடினமாக இருக்கும். மேலும், போதிய கால அவகாசம் இல்லாமல் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைத்துள்ளது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் நிகழாண்டில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
வழக்கம்போல கவுன்சலிங் முறையில் மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். பல ஏழை, எளிய மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்” என்றனர்.
மாணவர் ஜஸ்வந்தின் பெற்றோர் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் பொதுவான பாடத்திட்டத்தை கொண்டு வந்து பின்னர் நுழைவுத் தேர்வை நடத்தலாம். போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவர்கள் தங்களை தயார்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவத்துக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
