ராஜிவ் காந்தி 25-வது நினைவுநாள்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் இளங்கோவன் மரியாதை

ராஜிவ் காந்தி 25-வது நினைவுநாள்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் இளங்கோவன் மரியாதை
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜிவ்காந்தியின் 25-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் மரியாதை செலுத்தினார். பின்னர், கொடுஞ்செயல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் விஜயதாரணி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜிவ்காந்தி படத்துக்கு மரியாதை செலத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர், நிருபர்களை சந்தித்த இளங்கோவன் கூறும்போது, ‘ராஜிவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால், இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சிறந்த நாடாக முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால், இதை தடுக்கும் வகையில் அவர் கொல்லப்பட்டார். பஞ்சாயத்ராஜ் போன்ற பல்வேறு திட்டங்களை கிராமப் பகுதியில் செயல்படுத்தினார்’ என புகழாரம் சூட்டினார்.

மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in