Published : 19 May 2022 06:04 AM
Last Updated : 19 May 2022 06:04 AM

விஐடி மாணவர்கள் உருவாக்கிய மின்சார பந்தய கார்

விஐடியில் மின்சார பந்தய கார் தயாரித்த குழுவினரை வேந்தர் கோ.விசுவநாதன் நேரில் பாராட்டினார். அருகில், விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் உள்ளிட்டோர்.

வேலூர்: விஐடியில் மின்சார பந்தய காரை வடிவமைத்த குழுவினரை வேந்தர் கோ.விசுவ நாதன் பாராட்டினார்.

விஐடி இயந்திரவியல் துறை சார்பில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த கார் பந்தயத்தில் பயன்படுத்தக் கூடிய (கோ-கார்ட்) பிரிவை சார்ந்ததாகும். பொதுவாக, கார் பந்தயத்தில் பயன்படுத்தக்கூடிய கார், பெட்ரோலின் தேவை அதிகப் படியாக இருக்கும். ஆனால், விஐடியில் உருவாக்கப்பட்ட மின்சார கார் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, பந்தய காராக மட்டும் உரு வக்கப்பட்டுள்ள இந்த கார் எதிர்காலத்தில் மக்கள் பயன் படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்படும். அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக தலைமை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தூண்டில் கருப்ப ராஜ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ள மின்சார காரின் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை இருக்கக்கூடும். இந்த மின்சார கார் சூரிய மின் சக்தியில் இயங்கக்கூடிய வகையில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, இங்கிலாந்தில் உள்ள லவ்பரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாகன ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனமான வேலியோவும் இந்த ஆராய்ச் சியில் விஐடியுடன் இணைந் துள்ளது. இதுகுறித்த சர்வதேச கருத்தரங்கம் விரைவில் நடைபெறும்’’ என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் பேரா சிரியர் டெனிஸ் அசோக், இளங்கோவன் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். புதிய வகை கார் ஆராய்ச்சி மேற்கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாண வர்களை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பாராட் டினார்.

அப்போது, விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x