

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை தேர்தலுக்காக பொது விடுமுறை அளிக்கப்பட் டுள்ள நிலையில், சென்னையில் வாழும் மக்கள் சொந்த ஊரில் வாக்களிக்க கடந்த 3 நாட்களாக புறப்பட்டு சென்றனர். குறைந்த தொலைவில் உள்ள திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட் டங்களுக்கு செல்லும் மக்கள் நேற்று அதிகாலையில் கோயம் பேடு பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆனால், காலையில் போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பல மணிநேரம் காத்திருந்த மக்கள் போக்கு வரத்துக் கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக போதிய பஸ்களை இயக்கக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போக்கு வரத்துத்துறை அதிகாரிகள், போலீஸார் வந்து சமாதானப் படுத்தி, போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படும் என உறுதியளித் தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.