31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்துவிட்டார்: அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி

31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்துவிட்டார்: அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி

Published on

சென்னை: "31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரின் தயார் அற்புதம் அம்மாள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. எங்களது போராட்டம் 31 ஆண்டு கால போராட்டம். வெளிப்படையாகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரியும்.

இந்த 31 ஆண்டு காலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறைக்குள் கழிந்ததுள்ளது. ஒரு நிமிடம் யோசித்தால்தான் அதன் வலி, வேதனை புரியும். இதைக் கடந்த வந்துவிட்டார் என் மகன்.

தொடர்ந்து அரசு எனது மகனுக்கு பரோல் கொடுத்தது. பெயில் கொடுத்தது. அதனால்தான் அவரின் உடல் நிலையை நன்றாக கவனிக்க முடிந்தது. இது எனக்கு பெரிய மகிழ்ச்சி. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைக்கு குரல் கொடுத்த எல்லாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in