பேரறிவாளன் விடுதலை | ஒரு தாயின் அறப்போர் வென்றது: தொல்.திருமாவளவன் 

பேரறிவாளன் விடுதலை | ஒரு தாயின் அறப்போர் வென்றது: தொல்.திருமாவளவன் 
Updated on
1 min read

சென்னை: ஒரு தாயின் அறப்போர் வென்றது என்று பேரறிவாளன் விடுதலை குறித்து தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், ஒரு தாயின் அறப்போர் வென்றது என்று தெரிவித்துள்ளார்.

இது அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில்," ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்

பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடையேதுமில்லை. வாழ்விழந்து பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு என்ன போகிறது?" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in