

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்து பெரு நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களில் வாக்குப் பதிவுக்கு சென்றுவர சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.
தேர்தல் அன்று வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் செயல்படும் பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், துணிக் கடைகளில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. மாறாக, ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வெளியூர்களில் வாக்குரிமை உள்ளவர்கள். அவர்கள் வாக்குப் பதிவுக்குச் சென்றுவர ஒரு மணி நேரம் அனுமதி வழங்குவது தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்றாது.
ஆணையத்திடம் மனு
இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிட தலைமைத் தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.