Published : 18 May 2022 07:10 AM
Last Updated : 18 May 2022 07:10 AM

கோவை - மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23-ம் தேதி முதல் இயக்கம்

கோவை: கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் ரயில்கள் வரும் 23-ம் தேதிமுதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதா வது: கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஏற்கெனவே இரண்டு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (06816), வரும் 23-ம் தேதிமுதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். கோவை ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.30மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இதேபோல, மேட்டுப் பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் (06813) வரும் 23-ம் தேதிமுதல்ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

இந்த ரயில், மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவை-மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில்நிலையத்தில் ஏறிஇறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, இந்தவழித்தடத்தில் தினமும் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக்கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம். இதுதவிர, 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் பெற விண்ணப்பதுடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x