சைதையில் அரசு ஊழியர் குடியிருப்புக்காக ரூ.453 கோடியில் கட்டுமானப் பணி: வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆய்வு

சைதையில் அரசு ஊழியர் குடியிருப்புக்காக ரூ.453 கோடியில் கட்டுமானப் பணி: வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: அரசு ஊழியர்களுக்காக சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.452.94கோடியில் 1,891 வாடகை குடியிருப்புகள் கட்டும் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சிஎஸ்.முருகன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்சார்பில் சைதாப்பேட்டை தாடண்டர்நகரில் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்காக ரூ.452.94 கோடியில் 1,891 வாடகைக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கினார்.

“வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது.கட்டுமானப் பொருட்கள் வாங்கும்போது ஒப்பந்த புள்ளிகளில் இடம்பெறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொருட்களின் தரத்தை பலகட்டமாக ஆய்வு செய்த பிறகேபணிகளில் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பணிகளில் நிலவும் தாமதம் குறித்து ஆலோசனை நடத்தியதுடன் குடியிருப்பில் பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு அலுவலர்கள் உடன் இருப்பதுடன் பணியாளர்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் குணசேகரன், செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் பொற்கொடி, உதவி பொறியாளர் சிவகணேஷ், இளநிலை பொறியாளர் சத்யசாய், சென்னை மாநகராட்சி 10-வதுவார்டு குழு மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in