Published : 04 May 2016 09:09 AM
Last Updated : 04 May 2016 09:09 AM

தமிழகத்தில் 4 இடங்களில் அமித்ஷா இன்று பிரச்சாரம்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று ஒரே நாளில் 4 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா 3 நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இன்று 4 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வரும் அவர், காலை 10.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து ஹெலி காப்டர் மூலம் கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய இடங் களுக்கு சென்று பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற் கிறார். 9, 13 ஆகிய தேதிகளில் அமித்ஷா மீண்டும் பிரச்சாரத்துக் காக தமிழகம் வருவார் என்றும், அவரது பிரச்சார பயண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x