Published : 10 May 2016 12:11 PM
Last Updated : 10 May 2016 12:11 PM

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சி: அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டத்தில் போட் டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி ஆகிய இடங்களில் கனிமொழி எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார். சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து அவர் பேசியதாவது:

ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு சரியான கல்வி இல்லை. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொழில் வளர்ச்சி இல்லை. வணிகர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விவசாய வளர்ச்சி இல்லை. இவ்வாறு பல வழிகளில் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

புதிதாக யாருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. அரிசி, பருப்பு, பாமாயில் என எதுவும் ரேஷன் கடைகளில் முறையாகக் கிடைப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையில் அனைத்துப் பொரு ள்களும் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள், கொள்ளையர்கள் அனைவரும் வெளி மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என்றார். ஆனால், அவர்கள் எல்லோரும் தங்களது சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டனர். ஜெயலலிதா ஆட்சியில் நிம் மதியாக, பாதுகாப்பாக வாழ முடியாத நிலைதான் உள்ளது.

ஆண்கள் கூட வெளியில் தைரியமாக செல்ல முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லாத நிலை உள்ளது. இப்படி யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சி ஜெயலலிதா ஆட்சி.

தமிழகத்தில் உள்ள மொத்த பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடி. இவர்களுக்கு மொபெட் வாங்க மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாக இருந்தால் மொத் தம் ரூ.60 ஆயிரம் கோடி அரசு வழங்க வேண்டும். இது தமிழகத்தின் ஓராண்டு பட்ஜெட் தொகை. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாகக் கூறும் ஜெயலலிதா, 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தினார்.

பால் விலையை உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் பால் விலையை ரூ.7 குறைப்போம் என கருணாநிதி அறிவித்தபின் ஜெயலலிதாவும் பால் விலையை குறைப்போம் என்கிறார். கல்விக் கடன் வாங்கி படித்துள்ளார்கள். வேலை கிடை த்தால்தான் கடனை திரும்பிச் செலுத்த முடியும். அதை புரிந்துகொண்டு கல்விக் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கருணாநிதி அறிவித்துள்ளார். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவேன் என இப்போது கூறுகிறார் ஜெயலலிதா. அவர் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். வணிகர்களுக்கு நல வாரியம் சீரமைக்கப்படும். சீனப் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படும். பட்டாசு திரி தொழில் குடிசைத் தொழிலாக அறிவிக்கப்படும். 1,600 கிராமங் களுக்கு தாமிரபரணி தண்ணீர் சரியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாத்திரங்கள் உற்பத்தி வரி விதிப்பு அளவு ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். அரசு மருத்துவமனை விரிவுப டுத்தப்படும். பேருந்து நிலையம் சீரமைக்கப்படும் எனக் கருணாநிதி வாக்குறுதி அளித்துள்ளார். அவற்றை அவர் நிறைவேற்றுவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x