Published : 14 May 2016 09:23 AM
Last Updated : 14 May 2016 09:23 AM

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சர் பொன்னையன் நம்பிக்கை

அதிமுக அமைப்புச் செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். 74 வயதிலும் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் தினமும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். பிரச்சாரத்துக்கு இடையே, ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

மழையில் அதிகம் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் போட்டியிடுகிறீர்களே, மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

கனமழையின்போது சைதாப் பேட்டை மட்டுமல்ல 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா மின்னல் வேகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். 3 நாட் களில் 5 லட்சம் டன் குப்பை அப்புறப்படுத்தப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவுப் பொருட்களும் உடனுக் குடன் விநியோகம் செய்யப் பட்டன. அரசின் நடவடிக் கைகள் மக்களிடம் சென்றடைந் துள்ளதால் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இன்னும் சிலருக்கு வெள்ள நிவாரணத் தொகை சென்றடையவில்லை என்பது உண்மைதான். புள்ளி விவரங்களை சேகரித்து நிவார ணத் தொகை வழங்குவதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. எனவே, தேர்தல் முடிந்த பிறகு விடுபட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

வெள்ள பாதிப்பின்போது மக்களை முதல்வர் நேரடியாக சந்திக்காதது ஏன்?

எதிர்க்கட்சிகள்தான் இப்படி கூறி வருகின்றன. மக்கள் அப்படி நினைக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா 24 மணி நேரமும் மக்களுக்காக போர்க்கால அடிப்படையில் பணியாற்றியததால் வெள்ள நிவாரணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இதனால், உயிர்ச்சேதமும் தடுக்கப்பட்டது.

சொந்த தொகுதியான திருச் செங்கோட்டில் 4 முறை வெற்றி பெற்ற நீங்கள், இப்போது சைதாப் பேட்டையில் போட்டியிடுவது ஏன்?

சைதாப்பேட்டை தொகுதி எனக்கு புதிதல்ல. 44 ஆண்டுகளாக சென்னையில்தான் இருக்கிறேன். நான் 4 முறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு நலத்திட்டப்பணிகளை இந்தத் தொகுதியில் மேற்கொண்டுள்ளேன்.

மக்கள் நலக் கூட்டணி, அதிமுக வின் ‘பி’ அணி என்ற குற்றச்சாட்டு குறித்து?

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நடத்தும் இந்த பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. தமிழகத்தின் ஒரே வெற்றி அணி அதிமுகதான். நாடாளுமன்றத் தேர்தலைப்போல, சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

74 வயதிலும் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொள் ளும் நீங்கள் உடல்நலத்தை எப்படி பாதுகாத்துக் கொள்கிறீர்கள்?

கடந்த 11 ஆண்டுகளாக காய்கறி, பழங்கள், கீரை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாப்பிடுகிறேன். எம்ஜிஆருடன் கற்றுக்கொண்ட உடற்பயிற்சி எனக்கு உதவி யாக இருக்கிறது. மூச்சுப் பயிற்சி, ஆசனங்களை தினமும் செய்கிறேன். எனவே, சுட்டெரிக்கும் வெயிலால் சோர்ந்துபோகவில்லை.

சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?

வரும்காலத்தில் கனமழையின் போது பாதிப்பு ஏற்படாதவாறு அடையாறு ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைப்பேன். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேடான பகுதிகளில் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். நிலுவையில் உள்ள வெள்ள நிவாரணத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பேன். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு உள்ள அத்தியாவசிய திட்டங் களை ஆராய்ந்து செயல்படுத்து வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x