

சென்னை: வேளாண்மை பல்கலைக்கழக மையம் அளிக்கும் வீட்டுத் தோட்டம், சிறுதானிய உணவு தொடர்பான பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25 aaம் தேதி வீட்டுத் தோட்டம் தொடர்பாகவும், 26 aaம் தேதி சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு தொடர்பாகவும் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது.
வீட்டுத் தோட்டம் தொடர்பான பயிற்சியில் தோட்டம் அமைக்கும் முறைகள், நாற்றங்கால் அமைத்தல், ஊட்டச்சத்துக்கள் அளித்தல், பயிற்சி மற்றும் சீரமைப்பு முறைகள், அறுவடை பற்றிய விரிவான செயல் முறைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது. சிறுதானிய உணவு வகைகள் பயிற்சியில் தினை அரிசி பாயசம், தினை உருண்டை, சிறு தானிய அடை, சிறுதானிய காரா சேவ், பனிவரகு உப்புமா ஆகிய உணவு வகைககள் கற்றுத் தரப்படும்.
இதில் கலந்து கெள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு தலைவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், திரு வி க தொழிற்பேட்டை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்