Published : 26 May 2016 10:33 AM
Last Updated : 26 May 2016 10:33 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) ஆர்.விமலா தெரிவித்தார்.

தமிழகத்தில் 20 அரசு மருத் துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 397 இடங்கள் (15 சத வீதம்) அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) ஒதுக் கப்படுகிறது. மீதமுள்ள 2,253 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.

இதேபோல் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில், 65 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. 6 தனியார் (சுயநிதி) மருத்துவ கல்லூரிகளில் உள்ள 760 எம்பி பிஎஸ் இடங்களில், 470 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப் படுகின்றன. 17 தனியார் பல் மருத்து வக் கல்லூரியில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில், 970 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், 2016-2017ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப விற்பனை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று தொடங் குகிறது. வரும் 26-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெறும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த ‘செய லாளர், மருத்துவ தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை -10’ என்ற முகவரிக்கு வரைவோலை (DD) எடுக்க வேண்டும். மேலும், விண்ணப்ப படிவங்களை >www.tnhealth.org. மற்றும் >www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்திசெய்யப் பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் மருத்துவக் கல்வி இயக்ககம், செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண் டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடிப் படையில் நடைபெறும். நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x