டாஸ்மாக் கடைகளை உயர்த்தியது அதிமுகவின் சாதனை: குஷ்பு விமர்சனம்

டாஸ்மாக் கடைகளை உயர்த்தியது அதிமுகவின் சாதனை: குஷ்பு விமர்சனம்
Updated on
1 min read

தமிழகத்தில் 1,800 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளை 5 ஆண்டுகளில் 6,800 ஆக உயர்த்தியது தான் அதிமுகவின் சாதனையாக உள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசினார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பி.கோபியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என முதல்வர் கூறுகிறார். இது ஏமாற்று வேலை. தமிழகத்தில் 1,800 ஆக இருந்த டாஸ்மாக் கடைகளை 5 ஆண்டுகளில் 6,800 ஆக உயர்த்தியது தான் அதிமுகவின் சாதனையாக உள்ளது. ஆண்டுக்கு 1,000 கடைகளை உயர்த்தியுள்ளார்.

காங்கிரஸ் சார்பாக கே.ஜி.யிலிருந்து பிஜி வரை இலவசக் கல்வி தரப்படும். முதியோர் உதவித்தொகையை ஆயிரத்திலிருந்து 2,000 ஆக உயர்த்தித் தரப்படும். 100-நாள் வேலை திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இனி இது 150-நாளாக மாற்றப்படும். இவ்வாறு குஷ்பு பேசினார்.

இதையடுத்து தாராபுரத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in