கூட்டாலுமூடு கோயிலில் போட்டி வாணவேடிக்கை: போலீஸார்- பொதுமக்கள் மோதல் - தடியடி, கல்வீச்சு, 100 பேர் மீது வழக்கு

கூட்டாலுமூடு கோயிலில் போட்டி வாணவேடிக்கை: போலீஸார்- பொதுமக்கள் மோதல் - தடியடி, கல்வீச்சு, 100 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் போட்டி வாணவேடிக்கையின்போது போலீஸார் - பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 5 போலீஸார் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய தடியடியில் பொதுமக்கள் 20 பேர் காயமடைந் தனர். புதுக்கடையை அடுத்துள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு போட்டி வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் போலீஸார் அனுமதி மறுத்தனர். சமீபத்தில் கேரள மாநிலம் புற்றிங்கல் அம்மன் கோயிலில் நடந்த வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட விபத்தில் 110 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போலீஸாருடன் மோதல்

கோயில் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியதால் இரவு 9 மணியில் இருந்து 9.30 மணி வரை மட்டும் வாணவேடிக்கை நடந்த போலீஸார் அனுமதி அளித்தனர்.

ஆனால் அனுமதி அளித்த நேரத்தையும் கடந்து வாணவேடிக்கை நடந்த தாக கூறப்படுகிறது. உடனே போலீஸார் வாணவேடிக்கையை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் போலீஸாருக்கும் அவர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது.

5 போலீஸார் காயம்

அப்போது, போலீஸார் மீது சிலர் கற்களை வீசினர். இதில் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(24), ராஜ சேகர்(25), நாகர்கோவில் ஆயுதப் படையைச் சேர்ந்த பிரபுதாஸ்(35), ராஜ்திலக்(34), முருகேசன்(35) ஆகிய 5 போலீஸார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீ ஸார் தடியடி நடத்தி கூட்ட த்தை கலைத்தனர். இதில் குழந்தை கள், பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் குழித்துறை அரசு மருத்து வமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவில் புதுக்கடை போலீஸ் நிலையம் முன் இந்து அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டாலுமூடு கோயிலுக்கு சென்று பார்வையிட் டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறு ம்போது, ‘முறையான அனுமதி பெற்றே வாண வேடிக்கை நடத்தியுள்ளனர். ஆனால் போலீஸார் கோயிலுக்குள் நுழைந்து பக்தர்கள் மீது நடத்திய தடியடியில் பெண்கள், குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துமீறி நடந்துகொண்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் அவர்.

கோயில் நிர்வாகி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in