Published : 09 May 2016 12:02 PM
Last Updated : 09 May 2016 12:02 PM

ஓட்டுக்கு ரூ.700 வழங்க அமைச்சர் திட்டம்: தேர்தல் ஆணையத்திடம் உ.வாசுகி புகார்

ஓட்டுக்கு ரூ.700 வழங்க அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உ.வாசுகி புகார் அளித்தார்.

மதுரை மேற்கு தொகுதியில் ஆளும் கட்சியினரின் பணப் பட்டுவாடாவை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மேற்கு தொகுதி வேட்பாளருமான உ.வாசுகி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கொ.வீரராகவ ராவிடம் நேற்று புகார் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மேற்கு தொகுதியில் 50 பேருக்கு ஒரு முகவர் என்ற முறையில் அ.தி.மு.க. சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. வாக்காளர் ஒருவருக்கு ரூ.700 வழங்க கூட்டுறவுத் துறை அமைச்சரும், மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான செல்லூர் ராஜு முயற்சி செய்து வருகிறார். பைக்காரா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவித்தோம். ஆனால் நீண்ட நேரத்துக்குப் பின்பே பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் மக்கள் காலி குடங்களுடன் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களை திசை திருப்புவதற்காக பிரச்சாரம் செய்யும் நாளில் மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

ஆனால், தேர்தல் நேரத்தி ன்போது மட்டும் குடிநீர் விநியோகம் செய்வது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த வேண்டும் என்றார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் விஜயராஜன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x