வேளாண்மை துறையை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையாக மாற்ற வேண்டும்: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

வேளாண்மை துறையை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையாக மாற்ற வேண்டும்: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆறுபாதி கல்யாணம், வலிவலம் சேரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “வேளாண்மை துறையை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை என மாற்றம் செய்ய வேண்டும். வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் அனைத்துக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளின் விவசாய கடன்களும் 4% வட்டிக்கு போதிய அளவில், உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்ய வேண்டும். முழு வட்டி சலுகை அளிக்க வேண்டும்.

அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவுக்கும் மேல் 50% லாபம் கிடைக்கும்படி குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது, விவசாயிகள் அடையும் பயிர் நஷ்டங்களை, ஒவ்வொரு தனி விவசாயியின் நஷ்டங்களையும் ஈடு செய்யும் வகையில் முழுமையான பயிர்க் காப்பீடு செய்யப் பட வேண்டும்.

மகாத்மா காந்தி காண விரும்பிய தற்சார்பு கிராமங்களை உருவாக்க செயல் திட்டம் கொண்டுவர வேண்டும்.

பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா உருவாக்கிய செயல் திட்டங்களை தற்போதைய சூழலுக்கு ஏற்ப, தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயம் முக்கியப்படுத்தப்பட வேண்டும். இந்திய பசு இனங்கள், கால்நடை இனங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். காவிரி,முல்லைப்பெரியாறு, பாலாறு, பிரச்சினைகளில் தமிழகத்தின் முழு உரிமையை மீட்க வேண்டும்.

முழு மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். கிராம பொருளாதாரம் மேம்பட, தென்னையில் இருந்து ‘நீரா’ பனையில் இருந்து ‘பதநீர்’ அனுமதிக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2750, கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். நீர் பாசனத்துக்கு தனி அமைச்சகம் வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

கிராம பொருளாதாரம் மேம்பட, தென்னையில் இருந்து ‘நீரா’, பனையில் இருந்து ‘பதநீர்’ எடுக்க அனுமதிக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2750, கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். நீர் பாசனத்துக்கு தனி அமைச்சகம் வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in