

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் கோஷ்டி அரசியல், தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும், அமைச் சராகவும் இருந்த சி.வி.சண்முகம் மீது தலைமைக்கு புகார்கள் சென்றதால், கடந்த 2014ம் ஆண்டு கட்சிப்பதவி மற்றும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, மாவட்ட மருத்துவரணி செயலாளராக இருந்த டாக்டர் லட்சுமணன் மாவட்ட செயலாளரானார். இதை தொடர்ந்து லட்சுமணனை ராஜ்ய சபா எம்.பி-யாகவும் தலைமை அங்கீகரித்ததால் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கினார்.
இரண்டு கோஷ்டிகளும் எதிரெதிர் துருவங்களாக செயல்படு வதால் கட்சி நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்களிலும், போஸ்டர்களிலும் சி.விசண் முகத்தின் பெயரைபயன்படுத்து வதில்லை எதிர்கோஷ்டியினர்.
இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சி.வி.சண்முகத்துக்கு, லட்சுமணன் ஆதரவாளர்கள் முழுமையாக வேலை செய்யவில்லை என கூறப்பட்டது. மாவட்ட செயலாள ரான லட்சுமணன், வடக்கு மாவட் டத்தின் அனைத்து தொகுதிகளில் தேர்தல் பணிகள் செய்த அளவுக்கு விழுப்புரத்தில் தீவிரம் காட்டவில்லை என கூறப் படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் இறுதி முடிவு வெளியாவதற்குள், தனது ஆதரவாளர்களுடன் வந்த லட்சுமணன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்று, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் லட்சுமணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் அதிமுகவின் கோஷ்டி அரசியலால், நடுநிலை அதிமுகவினர் எந்த பக்கம் சென்றாலும் முத்திரை குத்தப்படும் என்று ஒதுங்கி, செய்வதறியாமல் திகைத்து நிற்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவிக்கிறார். அடுத்தபடம்: லட்சுமணன் எம்பி தனது ஆதரவாளர்களுடன் இனிப்பு வழங்குகிறார்.