Published : 16 May 2022 06:06 AM
Last Updated : 16 May 2022 06:06 AM

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்ட காய்கறிகள், பூக்கள் அறுவடை

காலாப்பட்டு சிறைச்சாலையில் அறுவடை செய்யப்பட்ட பூக்கள், காய்கறிகளுடன் அதிகாரிகள் மற்றும் கைதிகள்.

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஒவியம், சிற்பம் உள் ளிட்ட நுண்கலை பயிற்சியும், உடல்நலனை பாதுகாக்க பயிற்சியாளர் கள் மூலம் விளையாட்டு, நடனப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மேலும், சிறைச்சாலை வளாகம்அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன் படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகை யான பழம், மூலிகை, காய்கறி என50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள் ளன. உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு,ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படு கின்றன. இவற்றை கைதிகளே முறையாக பராமரிக்கின்றனர்.

இந்நிலையில் கைதிகளால் பயிரிடப்பட்ட செடிகளில் பூக்கள்,காய்கறிகள் நன்கு விளைந்துள் ளன. இவற்றை அறுவடை செய்யும்நிகழ்ச்சி அண்மையில் நடைபெற் றது. சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர், தேசிய பாது காப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கத்தரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரை, முள்ளங்கி,பலா, வெண்டை ஆகிய காய்கறிக ளோடு மஞ்சள், சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டன. கத்தரி-60, வெண்டை-20, முள்ளைங்கி-30, மாங்காய்-200, பலா-200, சாமந்தி-40, பச்சை பட்டாணி-10 கிலோ என நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறை கைதிகள் கூறுகையில், “ஒரு விதை செடியாக மலரும்போது மிக மகிழ்ச்சி அடைகிறோம். விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்துவிட்டோம். விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம்.

விவசாயத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.200 ஊதியம் பெறுகிறோம். தண்டனை காலம் முடிந்தும் பலரும் சிறையில் இருக்கிறோம். அரசு கருணையோடு விடுதலை செய்தால் இயற்கை விவசாயம் செய்வோம்’’ என்று குறிப்பிட்டனர்.

கைதிகள் பெறும் ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கு பணம்அவர்கள் சிறையில் இருக்கும் போதே அவர்களிடம் வழங்கப்படு கிறது.

இதனை தங்களை காண வரும் உறவினர்களிடம் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு மனநிறைவை இது தருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x