‘தி இந்து’ நாளிதழின் ‘இன்ஜினீயரிங் டிரீம்ஸ்’: பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் - இன்றும் நடக்கிறது

‘தி இந்து’ நாளிதழின் ‘இன்ஜினீயரிங் டிரீம்ஸ்’: பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் - இன்றும் நடக்கிறது
Updated on
1 min read

தி இந்து நாளிதழ் சார்பில் பொறி யியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக விண்ணப்பிப்பதற் கான சிறப்பு முகாம் மாணவர் களின் நலன் கருதி இன்றும் (வெள் ளிக்கிழமை) நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் மட்டும் விண்ணப்பிக்கும் புதிய முறையை அண்ணா பல் கலைக்கழகம் இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தி யுள்ளது. மாணவர்களின் பொறி யியல் படிப்பு கனவை நனவாக் கும் வகையில் ‘இன்ஜினீயரிங் டிரீம்ஸ்’ என்ற புதிய முயற்சி யாக மாணவர்கள் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் காக சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து ‘தி இந்து’ சார்பில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பு முகாம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

சென்னையில் ஆயிரம்விளக்கு சயர் மேன்சனில் இயங்கும் அண் ணாமலை பல்கலைக்கழக கணினி பயிற்சி மையம் (ஜெமினி மேம் பாலம் அருகில்), தி.நகர் மேட்லி ரோடு சாய்ராம் கல்வி குழும அலுவலகம், மேற்கு தாம்பரம் கக் கன் சாலை சாய்ராம் தகவல் மையம் ஆகிய 3 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் தாலுகா அலுவல கம் எதிரே அமைந்துள்ள அண் ணாமலை பல்கலைக்கழக கணினி பயிற்சி மையத்திலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உதவி மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு தன்னார்வலர்கள் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க உதவுவார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த உதவி மையங்கள் செயல்படும். ஏற்கெனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்களும் பதிவை இறுதி செய்ய இந்த உதவி மையங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பொறியியல் விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம்.

இந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. எனி னும் மாணவர்களின் நலன் கருதி இன்று (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இன்றும் இந்த உதவி மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதவி மையங்களுக் கான ஏற்பாடுகளை தி இந்துவுடன் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் நியூஸ் 7 தொலைக் காட்சி இணைந்து செய்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in