வேலூர் மத்திய சிறையில் பரோல் கேட்டு 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
வேலூர்: பரோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகன் தொடர்ந்து 15-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முருகன் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தங்கி யுள்ளார்.
இதற்கிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக உண்ணாவிதரம் இருந்து வருகிறார். பழங்களை மட்டுமே சாப்பிடும் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல் சோர்வடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகனுக்கு நேற்று முன்தினம் 3 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு அவரது மனைவி நளினி கேட்டுக்கொண் டும், முருகன் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
15 -வதுநாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் நிலையை சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். அவரது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற வைக்க சிறைத்துறை அதி காரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரு கின்றனர்.
முருகனின் உடல் நிலையை சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
