அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்
Updated on
1 min read

தேர்தல் தள்ளிவைக்கப்பட் டுள்ள அரவக்குறிச்சி தொகுதி யில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அரவக் குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகு திகளில் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது. இந்த தொகுதிகளில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரு தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

இங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in