Published : 15 May 2022 08:38 AM
Last Updated : 15 May 2022 08:38 AM
சிவகங்கை: காணொலி மூலம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தன்னை அவதூறாக பேசிய நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை நகராட்சி ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு காணொலி மூலம் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் சில தகவலை கேட்டு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மற்ற ஆணையர்கள் முன்னிலையில் தன்னை அவதூறாக பேசியதால் அதிருப்தி அடைந்த சிவகங்கை நகராட்சி ஆணையர், தன்னைப் பற்றி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அவசர, அவசரமாக சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொறுப்பு ஆணையராக நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நியமிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT