Published : 15 May 2022 08:57 AM
Last Updated : 15 May 2022 08:57 AM
திருவாரூர்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி காய்ச்சல் தாக்குதல் இல்லை என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆதிச்சபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 67.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவியதாக வரும் தகவல்கள் வதந்திதான். இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தக்காளி காய்ச்சல் தாக்குதல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT