Published : 06 May 2016 07:29 AM
Last Updated : 06 May 2016 07:29 AM

தமிழிசைக்கு மிரட்டல் விடுத்த பெண் உட்பட மூன்று பேர் கைது: வீட்டு உரிமையாளரை சிக்க வைக்க திட்டமிட்டது அம்பலம்

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விருகம்பாக்கம் தொகுதி யில் போட்டியிடுகிறார். கடந்த 2-ம் தேதி காலையில் அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்தது. அதில், “தேர்தல் போட்டி யில் இருந்து உடனடியாக விலக வேண்டும். இல்லாவிட்டால், கார் மீது லாரி ஏற்றி கொன்று விடுவோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய ரிடம் தமிழிசை புகார் கொடுத் தார். புகாரின்பேரில் விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பேரில், விருகம் பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி விசாரணை நடத்தி னார். குறுஞ் செய்தி வந்த செல் போன் எண்ணை வைத்து நடத்தப் பட்ட விசாரணையில் விருகம் பாக்கத்தை சேர்ந்த புவனேஸ்வரி, அவரது மகன் நாகராஜன், மகள் நாகவள்ளி ஆகியோர்தான் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியது தெரிந்தது. நேற்று மதியம் அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “புவனேஸ்வரி குடும்பத் துடன் குன்றத்தூரில் அலெக் சாண்டர் என்பரின் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார். அப்போது அலெக்சாண்டருக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், புவனேஸ்வரி வீட்டை மாற்றி விருகம்பாக்கத்துக்கு வந்துள்ளார். அலெக்சாண்டரை போலீஸில் சிக்க வைப்பதற்காக புவனேஸ்வரியும் அவரது மகன், மகளும் திட்ட மிட்டுள்ளனர். அதன்படி, அலெக்சாண்டரின் செல்போன் எண் தொலைந்துவிட்டது என்று வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தெரிவித்து, அதன் பயன்பாட்டை நிறுத்தியுள்ளனர். பின்னர் அதே சிம்கார்டு நிறுவன அலுவலகத்துக்கு சென்று அலெக்சாண்டர் பயன்படுத்திய அதே நம்பரை வாங்கி, இணைய தளம் மூலம் தமிழிசை சவுந்தர ராஜனின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு, அந்த நம்பருக்கு கொலை மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x