ரவுடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம்: வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் ( 23), புதுச்சேரி சோலை நகரில் வசித்து வந்தார். ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த மாதம் 8-ம் தேதி கோட்டக்குப்பம் அருகே மரக்காயர் தோட்டம் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி முத்தியால் பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (20), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அகமது அசேன் (22), அப்பு என்கிற ஜவஹர் (21) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு ஆட்சியருக்கு எஸ்பி ஸ்ரீ நாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் உள்ள 3 பேருக்கும் உத்தரவு நகலை சிறை ஊழியர்கள் மூலம் போலீஸார் நேற்று வழங்கினர்.
