காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் விஜய் வழங்கினார்
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத் தொகை
Updated on
1 min read

சென்னை: ​காமன்​வெல்த் விளை​யாட்​டில் பதக்​கம் வென்ற தமிழக விளை​யாட்டு வீரர்​களுக்கு ரூ.80 லட்​சம் ஊக்​கத் ​தொகையை முதல்​வர் விஜய் வழங்கி பாராட்​டி​னார்.

தேசிய அளவிலும், சர்​வ​தேச அளவிலும் நடை​பெறும் பல்​வேறு விளை​யாட்டு போட்​டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளை​யாட்டு வீரர்​கள் மற்​றும் வீராங்​க​னை​கள் பங்​கேற்று வெற்​றி​பெறும் வகை​யில் அவர்​களுக்கு உரிய பயிற்சி அளித்​தல், உயரிய ஊக்​கத்​தொகை வழங்​குதல், விளை​யாட்​டுக்​கான உட்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்​துதல் என பல்​வேறு நடவடிக்​கைகளை தமிழக அரசு முன்​னெடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்ற காமன்​வெல்த் விளை​யாட்டு போட்​டி​யில் பங்​கேற்று ஆண்​களுக்​கான பளுதூக்​கும் போட்​டி​யில் 65 கிலோ எடைப்​பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற தூத்​துக்​குடி மாவட்​டத்தை சேர்ந்த ராஜா முத்​துப்​பாண்​டிக்கு ரூ.30 லட்​சம், ஆண்​களுக்​கான மும்​முறை தாண்​டு​தல் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற திரு​வாரூர் மாவட்​டத்தை சேர்ந்த தடகள வீரர் பிர​வீன் சித்​திர​வேலுக்கு ரூ.30 லட்​சம், வெண்​கலப் பதக்​கம் வென்ற மதுரை மாவட்​டத்​தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்​சம் உயரிய ஊக்​கத்​ தொகையை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று வழங்கி பாராட்​டி​னார்.

இதில் பிர​வீன் சித்​திர​வேல் மற்​றும் செல்வ பிரபு ஆகியோர் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் முன்​னாள் விடுதி மாணவர்​களாக இருந்​தவர்​கள் ஆவர். மேலும் பிர​வீன் சித்​திர​வேல் அரசு வேலை​வாய்ப்​பில் விளை​யாட்டு வீரர்​களுக்​கான 3 சதவீத இடஒதுக்​கீட்​டின்​படி தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வனத்​தில் பணிபுரிந்து வருபவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிகழ்​வில் விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, செயலர் சந்​தீப் நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத் தொகை
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்: ரூ.812 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in