

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி எங்களுக்கு உண்டு. அதற்கு மிகப்பெரிய ஆயுதம் எங்களின் தேர்தல் அறிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோவில்பட்டியில் தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி சார்பில் நடந்த மே தின பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மே 1-ம் தேதி இந்தியாவில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று 1990-ம் ஆண்டு மாநிலங் களவையில் நான் கோரிக்கை வைத்தேன். அதை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் ஏற்று விடுமுறை அளித்தார். மதுவை தமிழகத்துக்கு கொண்டு வந்த வர் கருணாநிதி. அதை விரிவுபடுத்தியவர் ஜெயலலிதா. இவர்களை ஒதுக்கி தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி எங்களுக்கு உண்டு.
அதற்கு மிகப்பெரிய ஆயுதம் எங்களின் தேர்தல் அறிக்கை. நெறிமுறை குழு, பொது கண் காணிப்பு குழு, லோக் ஆயுக்தா, மது விலக்கு, விவசாய கடன்கள் தள்ளுபடி என்று பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் உள்ளன. தோல்வி பயம் காரண மாக திமுகவினர் என்னைக் கொல்ல சதி செய்கின்றனர் என்றார் வைகோ.