Published : 15 May 2022 04:00 AM
Last Updated : 15 May 2022 04:00 AM

வேலூர் மாவட்டத்தில் திரும்ப பெறப்பட்ட 40 டன் தரம் குறைந்த அரிசி

வேலூர் பாகாயம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அரிசியின் தரம் மற்றும் மூட்டைகளின் எடை சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்பேது, உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறியதுடன் கிடங்கில் மழைநீர் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இந்த ஆய்வு குறித்து ஆட்சியர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

கருப்பு அரிசி எனக்கூறப்படும் தரம் குறைந்த அரிசி குறித்த புகாரின் பேரில் ரேஷன் கடைகளில் இருந்து சுமார் 40 டன் அரிசி திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தரமான அரிசி வழங்கப் பட்டுள்ளது.

வேலூரில் உள்ள இந்த கிடங்கில் மட்டும் 2,517 டன் அரிசி, 260 டன் சர்க்கரை, 729 டன் கோதுமை, 38 டன் துவரம் பருப்பு, 81 டன் பாமாயில் இருப்பில் உள்ளது’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x