

கேரள எல்லையை ஒட்டிய வனப் பகுதி களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் காரணமாக தமிழக எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையை ஒட்டிய கேரள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது, போலீஸாருக்கும் - மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்பட்டு வரு கிறது.
இதையடுத்து, மாவோயிஸ்ட்களை பிடிக்க தமிழக-கேரள போலீஸார் இணைந்து வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவையில் கைது செய் யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர் தேர்தலை புறக்கணிப்பதாக தொடர்ச்சி யாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும், அட்டப்பாடி, அகழி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு தொடர் பாக போஸ்டர்களையும் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஒட்டி வருகின்றனர். இதன் காரணமாக, கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதி கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆனைகட்டி, பில்லூர் அணை, சிறுவாணி அணை, டாப்சிலிப் மற்றும் கேரளா, மன்னார்காடு, முள்ளி ஆகிய வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.