Published : 14 May 2022 05:36 AM
Last Updated : 14 May 2022 05:36 AM
தஞ்சாவூர்: ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் இன்று தொடங்குகிறது.
மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மிநரசிம்ம சுவாமி கோயில் அருகே யுள்ள ஸ் நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் பாகவத மேளா நாட்டிய நாடகம் இன்று தொடங்குகிறது.
தொடர் நிகழ்ச்சிகள்
மாலை 6 மணிக்கு ஸ்லஷ்மி நரசிம்மர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு வீதியுலா, 7.30 மணிக்கு மங்கள இசை, 8 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து நாளை (மே 15)இரவு 8 மணிக்கு ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளன.
இதேபோல, சாலியமங்கலம் அக்ரஹாரத்தில் இன்று பாகவத மேளா நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. ஸ்ரீலஷ்மி நரசிம்ம பாகவத மேளா பக்த சமாஜம் சார்பில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இன்றுமாலை 4.30 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ப்ராண பிரதிஷ்டை ஆராதனை, இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாசபெருமாள் கருட சேவையில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.
பின்னர், இரவு 10 மணிக்கு ஸ்ரீ பிரகலாத சரித்திரம் பாகவதமேளா நாட்டிய நாடகம் தொடங்கப்படவுள்ளது. மறுநாள் அதிகாலை வரை நடைபெறவுள்ள இந்த நாடகத்தில், ஸ்ரீநரசிம்ம அவதார காட்சி அரங்கேறவுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சமாஜத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். பின்னர், வி.ரக் ஷிதா குழுவினரின் பாட்டு, ருக்மணி பரிணயம் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஆகியவை நடை பெறும்.
மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு ருக்மணி கல்யாணம் (பாகவத சம்பிராதயப்படி), இரவு 7 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT