

வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக ஹவாலா பணம் வழங்குகி றோம் என்று கூறி பாஜக வேட் பாளர்களுக்கு மர்ம நபர்கள் போன் செய்வதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டி.குப்புராமு தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள் ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு டி.குப்புராமு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட் டுள் ளதாவது: தமிழகத்தில் பாஜக சார்பில் திண்டுக்கல், சேலம் தெற்கு, தஞ்சாவூர், திருச்செங்கோடு, ஈரோடு கிழக்கு, நிலக்கோட்டை, மணப்பாறை, சீர்காழி, மயிலாடு துறை, குறிஞ்சிப்பாடி, வானூர், பெரம்பூர், உதகமண்டலம், பத்மநாபபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியி டும் வேட்பாளர்களுக்கு மர்ம நபர்களிடம் இருந்து போன் வருகிறது.
அந்த அழைப்பில் பேசுபவர் கள், “நாங்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக நாங்கள் ஹவாலா பணம் அனுப்ப உள் ளோம். நீங்கள் கேட்கும் தொகை ரூ.20 லட்சம் என்றாலும், அதை உடனடியாக உங்களுக்கு தர தயாராகவே உள்ளோம். உங்களு டைய அடையாளச் சொல் (code word) மற்றும் எண்ணை உங்கள் தூதுவரிடம் சொல்லி அனுப்புங்கள்’ என்று கூறுகின்ற னர்.
இது மாதிரியான தவறான நடவடிக்கைகளில் பாஜக ஒருபோதும் ஈடுபடாது.
பாஜகவின் நற்பெயரை கெடுப்பதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர். சம்பந்தப்பட் டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு குப்புராமு அளித்த இன்னொரு மனுவில், “ராமநாதபுரம் பெரியப்பட்டினம் கிராமத்தில் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் துரைக்கண்ணன் மற்றும் அவருடன் இருந்த 15 பேர் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.