Published : 06 May 2016 07:46 AM
Last Updated : 06 May 2016 07:46 AM

வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா: ராஜபாளையத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டத்தில் போட்டி யிடும் திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது:

டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி சென்னை அருகே நேற்று நடை பெற்ற போராட்டத்தில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்களை அடித்து, உதைத்துள்ளது போலீஸ். சசிபெருமாள் மரணத்துக்கு காரண மாக இருந்த ஆட்சிதான் இன்று நடக்கும் ஆட்சி. மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்களை தாக்கியதும் இதே ஆட்சிதான்.

ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றார். அது முற்றிலும் பொய். பொய்யே அவருக்கு மூலதனம். நமது தமிழ் சமூகம், பண்பாடு, செத்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது எனக் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த ஆட்சியில் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது.

விருதுநகரில் 3,400 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என 110 அறிக்கையில் கடந்த 7.5.2013-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்.

கடந்த 10-ம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு ரத்து, பால் விலை குறைப்பு என 501 உறுதிமொழிகள் உள்ளன. விவசாய விளைபொருட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விலை, விவசாயப் பொருட்களுக்காக குளிர்பதன நிலையம், சோலார் பம்புசெட், முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை, விசைத் தறிக்கு குறிப்பிட்ட அளவில் இலவச மின்சாரம், தடையின்றி நூல் கிடைக்க நடவடிக்கை என தொகுதி அளவில் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ள ஒரே கட்சி திமுகதான். இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x