வானூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் தவறான முகவரி கொடுத்த 4 பேரின் ஆணை ரத்து

வானூர் அருகே பொன்னம்பூண்டியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
வானூர் அருகே பொன்னம்பூண்டியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

வானூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் தவறான முகவரி கொடுத்த, 4 பேரின் ஆணையை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வானூர் அருகே பொன்னம் பூண்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 43 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். அப்போது, 10 பயனாளிகள் 70 சதவீதத்திற்கு மேலும், 29 பயனாளிகள் 40 சதவீதத்திற்கு மேலும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் 4 பேர், வெளியூரில் வசித்து வருவதும், தவறான முகவரியை தந்து வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றிருப்பதும் கண்டறி யப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை உடன டியாக ரத்து செய்யும்படி ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வானூர் வட்டாட்சியர் பிரபுசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

4 பேர், வெளியூரில் வசித்து வருவதும், தவறான முகவரியை தந்து வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in