

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், திருப்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விஜயகாந்த் முதல்வராகி கூட்டணி ஆட்சி அமைந்தால், 30 நாட்கள்கூட நீடிக்காது. அவரை மக்கள் நலக் கூட்டணியில் சேர்த்ததில் தவறில்லை; ஆனால், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதில், அந்தக் கூட்டணி வீழ்ந்துவிட்டது.
பரிசோதனை முயற்சியாக காந்திய மக்கள் இயக்கமும், பொன்ராஜின் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியும் 46 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்த மாற்று அரசியல் கூட்டணி, நடப்பு தேர்தலுடன் வீழ்ந்துவிடாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு திட்டம் வகுத்து செயல்படுகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தப்பிப் பிழைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.