தெற்கு ரயில்வே சாதனை விழிப்புணர்வு வாரம்

தெற்கு ரயில்வே சாதனை விழிப்புணர்வு வாரம்
Updated on
1 min read

ரயில்வே சாதனை விழிப்புணர்வு வாரம் (ரயில் ஹம்சபர் சப்தா) தொடக்க விழா தெற்கு ரயில்வேயில் நேற்று தொடங்கியது. இதில், எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய சுற்றுச்சூழல் மேலாண்மை ஆலோசகர் கே.சுவாமிநாதன் பங்கேற்று தொடங்கிவைத்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோக்ரி கலந்து கொண்டு ரயில் நிலைய சுவர் மற்றும் ரயில் பெட்டிகளை தூய்மை படுத்தி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இவருடன் சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா உட்பட அனைத்து மண்டல மேலாளர்களும், தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரசன்னா குமார் மற்றும் 25-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் பி.கே.அகர்வால் கலந்து கொண்டு அங்குள்ள குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்தார்.

ரயில்வே சாதனை விழிப்புணர்வு வாரம் தொடக்க விழா தெற்கு ரயில்வேயில் நேற்று தொடங்கியது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய ஆலோசகர் கே.சுவாமிநாதனும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரியும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in