

ஆரணி அடுத்த ராமசாணிக் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித் துள்ள மாணவ, மாணவி களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பில் 59 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். அவர்கள் அனைவரும், அடுத்த கல்வி யாண்டில் (2022-23-ம் ஆண்டு) நடுநிலை கல்வியில்(6-ம் வகுப்பு படிப்பதற்காக) அடியெடுத்து வைக்க உள்ளனர்.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து மாற்று பள்ளிக்கு செல்லும் 59 மாணவர்களுக்கும் பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி தலைமை வகித் தார். மாணவர்களை வாழ்த்தி திருக்கறள் புத்தகத்தை சமூக ஆர்வலர் பிரபாகரன் வழங்கினார். அப்போது அவர், திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து மாண வர்களின் நினைவாக, பள்ளி வளாகத்தில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னர், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆசிரியர்களுக்கு மாணவர்களும் நினைவு பரிசு வழங்கினர். அதன்பிறகு, தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுடன் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதில், இடைநிலை ஆசிரியர் சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் வனிதா, ஜெயந்தி, துர்கா, பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.